அதிவேகத்தில் சென்ற காரை தடுத்து நிறுத்திய பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பிஞ்சுக்குழந்தைக்கு முதலுதவி செய்து காப்பாற்றியிருக்கும் பொலிஸாரை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கலிபோர்னியாக மாகாணத்தை சேர்ந்த வில்லியம் கிம்ப்ரோ என்கிற பொலிஸார் கடந்த 11ம் திகதியன்று அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த காரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

காரை திறந்து விசாரித்த போது சுயநினைவில்லாத குழந்தை ஒன்று தாய் மடியில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் நடந்தவை குறித்து விசாரிக்கும் போது, பிறந்து 12 நாட்கள் மட்டுமே ஆகியிருந்த அந்த குழந்தை பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்ததால், மூச்சு விடுவதை நிறுத்திவிட்டதாகவும், அதன் காரணமாகவே மருத்துவமனைக்கு வேகமாக செல்கிறோம் என தெரியவந்துள்ளது.

உடனே குழந்தையை தன்னுடைய கைகளில் வாங்கிய வில்லியம், முதலுதவி கொடுக்க ஆரம்பித்துள்ளார். மேலும் இந்த தகவல் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து முதலுதவி கொடுத்துக்கொண்டிருந்த வில்லியம், 'எழுந்திரு குழந்தை எனக்காக ஒருமுறை அழு', 'உன் கண்களை திறந்து பார் அன்பே' என கூறிக்கொண்டே நெஞ்சுப்பகுதியில் தேய்த்துவிட்டார்.

அதிர்ஷ்டவசமாக சிறிது நேரத்திலே அந்த குழந்தை மூச்சுவிட்டு அழ ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவர் தொடர்ந்து அம்புலன்ஸ் வரும் வரை அந்த குழந்தைக்கு முதலுதவி கொடுத்துக்கொண்டே இருந்தார்.

இந்த வீடியோ காட்சியானது அந்த பொலிஸாரின் உடலில் இருந்த காமிராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்த இணையதளவாசிகள் பொலிஸாரின் செயலை பாராட்டி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers