எரிவாயு இணைப்பின் போது தீக்கிரையான வீடு: ஒருவர் பலி.. 15 பேர் படுகாயம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இயற்கை எரிவாயு இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தெற்கு கலிபோர்னியாவில் கேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் ஒரு வீட்டில் இயற்கை எரிவாயு இணைப்பை சரி செய்து கொண்டிருந்துள்ளனர்.

அவர்கள் வந்து ஒரு மணி நேரம் கழித்து இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு ஊழியர் உயிரிழந்திருப்பதாகவும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோக சம்பவத்திற்கு தெற்கு கலிபோர்னியா எரிவாயு நிறுவனம் தங்களுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளது. மேலும் இதனால் பாதிக்கப்பட்ட தனிநபர் மற்றும் குடும்பங்களை சேர்ந்தவர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...