அடம்பிடித்த மனைவி... குளியலறையில் வைத்து கொலை செய்த இந்திய வம்சாவளி கணவன்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் விவாகரத்து கேட்ட மனைவியை குளியலறையில் வைத்து கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளி கனவன் குற்றவாளி என அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Avtar Grewal என்ற 44 வயது நபரே தமது மனைவியான நவ்னீத் கவுர் என்பவரை கொலை செய்ததன் பேரில் தற்போது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் அரிசோனா மாகாணத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்துவரும் நவ்னீத் கவுர் விவாகரத்து கோரியதை அடுத்து கொலை செய்ததாகவே வழக்கு.

2005 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் சில மாதங்களிலையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவதார் கனடாவிலும், நவ்னீத் கவுர் அமெரிக்காவிலும் குடியிருந்து வந்துள்ளனர்.

இதனிடையே நவ்னீத் கவுர் தமக்கு விவாகரத்து வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் அதற்கு அவதார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பலமுறை நவ்னீத் கவுர் கோரிக்கை விடுத்த நிலையில், நேரில் வந்து பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரலாம் என அவதார் தெரிவித்துள்ளார்.

அதன்படி அமெரிக்காவில் உள்ள நவ்னீத் கவுர் குடியிருப்புக்கு அவதார் சென்றுள்ளார். ஆனால் விவாகரத்து வேண்டும் என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.

வாக்குவாதத்தின் இடையே தமக்கு வேறு நபருடன் பழக்கம் இருப்பதாக நவ்னீத் கவுர் கூறியது அவதாரை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது.

தொடர்ந்து மனைவியை கடுமையாக தாக்கிய அவதார், அவரை குளியலறை தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

இது திட்டமிட்ட கொலை அல்ல எனவும், வாக்குவாதத்தினிடையே நடந்த சம்பவம் என வாதாடியபோதும், நீதிமன்றம் அதை ஏற்க மறுத்ததுடன், அவதார் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

இந்த வழக்கின் தண்டனை விபரங்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படும் என மாகாண நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்