காதலன் கண் முன் வேறொரு ஆணை முத்தமிட்ட இளம்பெண்: பின்னர் நடந்த கொடூர சம்பவம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது காதலன் கண் முன்னேயே வேறொரு ஆணை முத்தமிட்ட இளம்பெண்ணை கழுத்தறுத்துக் கொலை செய்து அதை இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்தார் அந்த காதலர். இந்த கொடூர சம்பவம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்துள்ளது.

நட்பையும் காதலையும் மட்டுமின்றி கொலைகளையும் இணையம் மூலம் உலகம் காணும் ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம் நாம்.

இந்த சம்பவம் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது எனலாம். இணையதளம் ஒன்றின் மூலம் சந்தித்துக் கொண்டவர்கள் நியூயார்க்கைச் சேர்ந்த Bianca Devins (17) மற்றும் Brandon Clark (21).

ஒரு நாள் இன்னொரு ஆணுடன் மூவருமாக இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருக்கிறார்கள்.

அங்கு Bianca, தனது காதலனின் முன்னாலேயே அந்த இன்னொரு ஆணின் கரங்களைப் பிடித்து வைத்துக் கொண்டதோடு, உதட்டோடு உதடு சேர்த்து இருமுறை முத்தமிட்டிருக்கிறார்.

அப்போதே அவரது முகத்தில் அதிர்ச்சியைக் கண்கூடாக கண்டிருக்கிறார் Bianca. பின்னர் அந்த இரவு முழுவதிலும் Brandon முன்னாலேயே அந்த நபருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்.

மறுநால் விடியற்காலை, இந்த விடயங்களை எல்லாம், தனது காதலரை எந்த இணையதளத்தில் சந்தித்தாரோ, அதே இணைய தளத்தில் அனுப்பிய வண்ணம் இருந்திருக்கிறார் Bianca.

(முதலில் கொலைக்கான காரணம் தெரியாமல் திகைத்த பொலிசாருக்கு, பின்னர் இந்த செய்திகள் மூலம் அனைத்தும் விவரமாக தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.) கடைசியாக அதிகாலை 5.47க்கு இந்த செய்திகளை அனுப்பிய Bianca, 7 மணிக்கு கொலை செய்யப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

தகவலை அனுப்பியவர் வேறு யாருமில்லை, Biancaவை கொலை செய்த அவரது காதலரான Brandonதான்.


Biancaவை கழுத்தில் கத்தியால் கீறி கொலை செய்த Brandon, அவர் அருகில் அமர்ந்து ஒரு புகைப்படத்தையும் எடுத்து அதன் அருகில் 'I'm sorry Bianca' என்று எழுதி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த படத்தை கிட்டத்தட்ட ஒரு நாள் தனது தளத்தில் அனுமதித்திருந்ததற்காக, இன்ஸ்டாகிராம் கடும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது.

அந்த படத்தைக் கண்டவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, Brandonஐத் தேடி பொலிசார் புறப்பட்டிருக்கிறார்கள்.

அவர் எங்கே இருப்பார் என தெரியாமல் குழப்பத்திலிருக்கும்போதுதான் Brandonனே போன் செய்து, தான் Biancaவை கொலை செய்த விவரத்தை பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

பொலிசார் அவர் இருந்த இடத்திற்கு செல்ல, பொலிசாரைக் கண்டதும் தன் கையில் இருந்த கத்தியால் தனது கழுத்தில் தானே குத்திக் கொண்டிருக்கிறார் Brandon.

அவருக்கு ஏற்பட்டுள்ளது மோசமான காயம்தான் என்றாலும், அவர்து உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்துள்ளது.

அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் பொலிசார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...