மர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள்! காரணம் என்ன?

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் மர்மமான இடமாக கருதப்படும் Area 51ஐ பார்ப்பதற்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக Area 51 குறித்த பேச்சு உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அரிதான ஒன்றாக பார்க்கப்படும் இந்த இடம், ஏலியன்கள் குறித்த ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கம் பல ஆண்டுகளாக இதனை ரகசியமாக பாதுகாத்து வந்தது. ஆனால், ஏலியன்கள் தொடர்பான விவாதங்கள் அதிகரித்தும், விஞ்ஞானி வளர்ச்சியும் தற்போது Area 51ஐ நேரில் பார்ப்பதற்கான ஆவலை பலரிடம் தூண்டியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், Storm Area 51, They Can't Stop All of U' என்ற பேஸ்புக் Event ஒன்று செப்டம்பர் 20ஆம் திகதி நடக்க உள்ளது. அன்றைய தினம் பல லட்சம் பேர் Area 51ஐ முற்றுகையிட உள்ளனர்.

இதுவரை அங்கே செல்ல முடிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. Conspiracy theorists எனப்படும் சதிக் கோட்பாட்டாளர்கள், இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க உள்ளனர்.

Area 51யின் அதிகாரப்பூர்வ பெயர் Homey Airport ஆகும். இது அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி வியட்நாம் போரின்போது சி.ஐ.ஏ ஆவணங்களில் Area 51 என்ற ரகசியப் பெயரால் குறிப்பிடப்பட்டது.

கடந்த 1955ஆம் ஆண்டில் தான் இங்கே போர் விமானங்கள் தொடர்பான ஆராய்ச்சி தொடங்கியது. சிறப்பு வளையத்துக்குள் இருக்கும் பகுதி என்பதால், இது தொடர்பான தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த இடம் புதிய விமானங்களையும், ராணுவத்துக்கான கருவிகளையும் பரிசோதிக்கும் இடமாகவும் இது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பல லட்சம் பேர் இங்கே செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் உண்மையிலேயே அங்கு வருவார்களான் என்ற சந்தேகம் உள்ளது.

எனினும் விமானப் படை தரப்பில் இதுகுறித்து கூறுகையில், ‘நெவாடாவில் இருக்கும் இந்தப் பகுதியானது விமானப்படை சோதனைகள், போர் விமான பயிற்சிகள் நடைபெறும் பகுதி. அங்கே இருக்கும் பாதுகாப்பு வசதிகளைப் பற்றி விவாதிக்க முடியாது. ஆனால், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் நுழைய முயற்சி செய்வது ஆபத்தை விளைவிக்கும்’ என தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers