அமெரிக்காவில் உரையாற்றிய இம்ரான்கான்.. பாகிஸ்தான் பிரிவு கோஷத்தால் பரபரப்பு!

Report Print Kabilan in அமெரிக்கா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உரையாற்றும்போது, சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வாஷிங்டனில் உள்ள விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே அவர் உரையாற்றினார்.

அப்போது திடீரென இருக்கையில் இருந்து எழுந்த சிலர், பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக் கோரியும், அங்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், மனித உரிமைகளை மீறுவதாகவும் அவர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறுங்கள் என கூறிக்கொண்டு அவர்களை தள்ளினர். அதன் பின்னர் உள்ளே நுழைந்த பாதுகாப்பு படையினர், கோஷம் எழுப்பியவர்களை வெளியேற்றினர்.

அரங்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள், அமெரிக்காவில் வாழும் பலூசிஸ்தான் பகுதியினர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers