ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு மரணதண்டனை! முற்றுகிறதா போர் பதற்றம்? கடும் விளைவு சந்திக்கப்போவதாக எச்சரிக்கை

Report Print Santhan in அமெரிக்கா

ஈரான் நாட்டில், அமெரிக்கா சிஐஏ உளவு அமைப்பைச் சேர்ந்த கூலிப்படையினர் 17 பேர் கைது செய்யப்பட்டு, அதில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியானதால், இதன் விளைவு பெரிதாக இருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் கைவிடப்பட்டதால், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை தீவிரப்படுத்தி வருகிறது.

இதனால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. அதுமட்டுமின்றி தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் நிர்பந்திக்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

குறிப்பாக ஈரானை அச்சுறுத்தும் விதமாக, மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவித்து வருகிறது. இது நாளடைவில் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் நிலை ஏற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், ஈரான் நாட்டில் செயல்பட்டுவந்த அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பை சேர்ந்த கூலிப்படையினர் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

கைது செய்யப்பட்ட உளவாளிகள் அனைவரும் ஈரான் நாட்டின் அணு சக்தி, ராணுவம், மென்பொருள் போன்ற துறைகளில் அரசுக்கு உதவும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் மூலம் ஈரானின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான தகவல்களை திருடி அதை அமெரிக்காவின் சிஐஏ அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உளவு வேலையில் சி.ஐ.ஏ. அதிகாரிகள் யாரும் நேரடியாக ஈடுபடவில்லை. கைக்கூலிகள் மூலம் தகவல்களை பெற்று அவற்றை அமெரிக்க அரசுடன் பகிர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியன.

இதனால் இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, ஈரான் பல காலங்களாக பொய்களின் புகழிடமாக உள்ளது. உலக நாடுகளிடையே பொய் தகவலை பரப்புவது அவர்களுக்கு இயற்கையான ஒன்று.

அமெரிக்க உளவாளிகள் யாரும் ஈரானில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. ஒருவேளை அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்