திரைப்படத்தில் வந்த பேருந்தை பார்க்க சென்ற புதுமணப்பெண்.. பின்னர் அவருக்கு நேர்ந்த துயரம்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஹாலிவுட் திரைப்படத்தில் வந்த பேருந்தை பார்க்கும் ஆசையில், புதுமணப்பெண் ஒருவர் தனது உயிரை இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு ‘Into the Wild' எனும் ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. அமெரிக்காவைச் சேர்ந்த மலையேற்ற வீரரான கிறிஸ்டோபர் மெக்கேண்ட்லஸ் என்பவரது வாழ்க்கையைத் தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் உடைந்த பேருந்து ஒன்று முக்கிய இடம்பெற்றிருக்கும். இதனால் அமெரிக்காவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பலர், அலஸ்கா மாகாணத்திற்கு சென்று தெக்லானிகா ஆற்றைக் கடந்து, கிறிஸ்டோபர் வாழ்ந்த பேருந்து பார்த்து செல்கின்றனர்.

இந்நிலையில், பெலாரஸ் நாட்டில் இருந்து வெராமிக்கா என்ற புதுமணப்பெண், தனது கணவர் பியோட்டர் மார்க்கிலவுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றார். அவர் கிறிஸ்டோபர் வாழ்ந்த பேருந்தை பார்ப்பதற்காக அலஸ்காவின் டெனாலி பகுதிக்கு தனது கணவருடன் சென்றார்.

அப்போது, தெக்லானிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாக தெரிகிறது. எனினும், பேருந்தை பார்த்துவிட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்துள்ளார். இதன் காரணமாக, இருவரும் ஆற்று வெள்ளத்தில் கயிறு மூலம் கரையை கடக்க முயன்றனர்.

அச்சமயம் வெள்ளத்தில் சிக்கிய வெராமிக்கா, எதிர்நீச்சல் அடிக்க முடியாமல் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்