ஏரியில் சிக்கிய சிறுவனை ஹீரோ போல காப்பாற்றிய நபர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏரியில் சிக்கிய சிறுவனை தன்னுடைய ஜெட் ஸ்கையில் பத்திரமாக காப்பாற்றிய நபருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கலிபோர்னியாவின் ரீட்லி பகுதியில் உள்ள ஏரியில் ஜோஸ் மோரல்ஸ் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் குளித்து கொண்டிருந்துள்ளார்.

அந்த சமயத்தில் திடீரென ஏரியின் ஆழப்பகுதியில் சிக்கிய ஒரு சிறுவன் உதவி கேட்டு கூச்சலிட ஆரம்பித்துள்ளான்.

இதனை பார்த்த ஜோஸ் மோரல்ஸ் உடனே லைஃப் ஜாக்கெட்டை அந்த சிறுவனை நோக்கி வீசியெறிந்தார். ஆனால் லைஃப் ஜாக்கெட்டை பற்றியும் கூட சிறுவனால் அதிலிருந்து மீள முடியவில்லை.

>நிலைமை கட்டுப்பாட்டை மீறிச்செல்வதை புரிந்துகொண்ட ஜோஸ், உடனடியாக தன்னுடைய ஜெட் ஸ்கையை எடுத்துக்கொண்டு சிறுவனை காப்பற்றி கரைக்கு கொண்டு வந்தார்.

இதனை பார்த்தும் அங்கிருந்த பொதுமக்கள் ஜோஸை பாராட்டினர்.

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று இதேஇடத்தில் குளித்து கொண்டிருந்த 5 சிறார்கள் ஏரியில் மூழ்கடிக்கப்பட்டு பின்னர் பத்திரமாக காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்