தேனிலவுக்கு சென்ற இளம் ஜோடி: திருமணமாகி மூன்றே நாட்களில் நிகழ்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில், இளம் ஜோடி ஒன்று தேனிலவுக்காக சென்ற இடத்தில், கணவன் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kansas நகரில் திருமணம் செய்து கொண்ட Cheyenne Hedrick (22) மற்றும் Dalton Cottrell (22) என்னும் வேதாகம கல்லூரியில் பயின்ற மாணவர்களாகிய இருவரும் தேனிலவுக்காக ப்ளோரிடாவுக்கு சென்றிருக்கின்றனர்.

இருவரும் மகிழ்ச்சியாக ப்ளோரிடாவில் கடலில் குளிக்கும்போது, திடீரென எழுந்த பெரிய அலை ஒன்று இருவரையும் கடலின் ஆழத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது.

Cottrellக்கு கடலில் இறங்கி பழக்கம் இல்லாததால் அவர் மிரண்டு போயிருக்கிறார். தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், பயத்தில் தான் மூழ்கும்போது தனது மனைவி Hedrickஐயும் தண்ணீருக்குள் இழுத்திருக்கிறார்.

எவ்வளவோ முயன்றும் கணவனைக் காப்பாற்ற முடியாத Hedrickக்கு தானும் இறந்து விடுவோம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

தண்ணீரில் மூழ்கிய சிறிது நேரத்தில், மீண்டும் Cottrell தண்ணீர் பரப்பிற்கு மேல் வரும்போதே அவரது கண்கள் மேலே சொருகிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார் Hedrickக்கு .

இதற்கிடையில் உதவிக்கு வந்த உதவிக்குழுவினர் வாயில் நுரையுடன் காணப்பட்ட Cottrellஐ கரைக்கு இழுத்து வந்து அவருக்கு முதலுதவி செய்ய முயன்றிருக்கின்றனர்.

ஆனால் அவர்களால் Cottrellஐ காப்பாற்ற முடியாமல் போய்விட்டிருக்கிறது. திருமணமாகி மூன்றே நாட்களில் அந்த இளம் ஜோடிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை, இருவரது குடும்பத்திலும் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்