பின்லேடனின் மகன் குறித்து பேசிய டிரம்ப்! என்ன கூறினார் தெரியுமா?

Report Print Kabilan in அமெரிக்கா

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என்று ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பின்னர், 2017ஆம் ஆண்டு ஹம்ஸா பின்லேடனை சர்வதேச்ச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஹம்ஸா பின்லேடன் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஹம்ஸா பின்லேடன் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 7 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில் தான், ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அரசின் உளவுத்துறை அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். இந்நிலையில், ஹம்ஸா பின்லேடன் குறித்து ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ‘அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வந்தவர் ஹம்ஸா பின்லேடன். அவர் அமெரிக்காவை பற்றி தொடர்ந்து மிக கீழ்த்தரமாக விமர்சித்து வந்தார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்