போக்குவரத்து மிக்க சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்! சிக்னலில் நின்ற வீடியோ

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று, போக்குவரத்து மிக்க சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

வாஷிங்டன் மாகாணத்தில் போக்குவரத்து மிக்க சாலை ஒன்றில், சிறிய ரக விமானம் திடீரென தரையிறங்கியது. காவல் அதிகாரி ஒருவர் சென்று கொண்டிருந்த காருக்கு மேலே, குறைந்த உயரத்தில் பறந்து சென்ற அந்த விமானம், சிக்னலுக்கு முன்பு நின்றது.

குறித்த விமானம் கே.ஆர் 2 ரகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பயணிக்கக்கூடியது ஆகும். வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தை இயக்கிய விமானி, எரிபொருள் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கியதாக தெரிவித்தார்.

இதனை காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். காவல் அதிகாரியின் காரில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவான இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்