16 வயதில் ஆயுள் தண்டனை கைதி... 31 வயதில் விடுதலை: கற்பை காப்பாற்ற போராடிய மாணவியின் கதை

Report Print Santhan in அமெரிக்கா
214Shares

தன்னை வன்கொடுமை செய்ய முயன்றவனை சுட்டு கொன்றதற்காக, ஆயுள் தண்டனை கைதியாக இருந்த 16 வயது சிறுமி தற்போது தன்னுடைய 32 வயதில் விடுதலையாகவுள்ளதால், இதைப் பற்றி வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் டென்னிஸீ மாகாணத்தை சேர்ந்தவர் சின்டோயா பிரௌன், இவர் தன்னுடைய 16-வது வயதில், 43 வயதான ஜானி ஆலன் என்வரிடமிருந்து தன்னுடைய கற்பை காப்பாற்றுவதற்காக அவரிடம் போராடிய போது, அவரது பின்தலையில் துப்பாக்கியால் சுட்டார்.

இதனால் ஜானி ஆலன் உயிரிழந்ததால், சின்டோயா பிரௌனவுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க திரைப்பிரபலங்கள், வழக்கறிஞர்கள் என பலருக்கும் சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுக்க 15 வருடன் சிறை தண்டனை அனுபவித்த, அவர் வரும் 7-ஆம் திகதி தன்னுடைய 31 வயதில் விடுதலையாகிறார்.

இது குறித்த செய்திகள் வெளியாகியிருந்த நிலை, இந்த விடுதலை குறித்து சின்டோயா பிரௌனவிடம் கூறிய போது, அவர் என்ன சொன்னார் என்பதை வழக்கறிஞர் விளக்கியுள்ளார்.

அதில், நான் அவளிடம் உனக்கு ஆகஸ்ட் மாதம் விடுதலை என்று கூறியவுடன், அவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியை கண்டேன், அதுமட்டுமின்றி சீக்கிரம் விடுதலையாகாமல் இன்னும் நாட்கள் தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது என்பது குறித்து வருத்தமா என்று கேட்டேன், அதற்கு அவள் நான், என்னுடைய 67-வது வயதுவரை உள்ளிருக்க நேரும் என நினைத்தேன்.

ஆனால், நான் 31 வயதிலேயே விடுதலை பெறுகிறேன் என்பதை உணரும்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியதாக தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்