மருமகளுடன் தொடர்பு வைத்திருந்த நபர்: வேறு ஆணுடன் பழகியதாக சந்தேகத்தால் செய்த செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

மனைவி வழியில் தனக்கு மருமகள் முறை கொண்ட ஒரு பெண்ணுடன் மனைவிக்கு தெரியாமல் தொடர்பு வைத்திருந்த ஒருவர், அந்த பெண் வேறொருவருடன் பழகுவதாக சந்தேகம் ஏற்பட்டதன் பேரில் அவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

ப்ளோரிடாவைச் சேர்ந்த Stephen Myers (44) என்பவருக்கும் அவரது மனைவி வழி உறவினரான (niece) Winnie Mendoza (21) என்ற இளம்பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளாக முறை தவறிய உறவு இருந்து வந்திருக்கிறது.

இது அவர் மனைவி உட்பட யாருக்கும் தெரியாமலே ரகசியமாக இருந்திருக்கிறது. இந்நிலையில், ஒருநாள் இரவு எங்கோ சென்று விட்டு திரும்பிய Winnieயை காரில் பின் தொடர்ந்த Stephen, அவர் காரிலிருந்து இறங்கியதும், யாருடன் இருந்து விட்டு வருகிறாய் என்று கேட்டு சண்டை போட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில், துப்பாக்கியை எடுத்து Winnieயை சுட்டுவிட்டு, அங்கிருந்து காரில் ஏறி விரைந்திருக்கிறார் Stephen.

Winnie, சம்பவ இடத்திலே உயிரிழக்க, வீட்டுக்கு சென்ற Stephen, தனது மனைவியிடம் Winnieயை சுட்டுக் கொன்றுவிட்டதாக கூறிவிட்டு, காரில் தப்பியிருக்கிறார்.

என்றாலும் Stephenஐ ட்ராக் செய்த பொலிசார், அவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர் செய்துள்ளார்கள். அவர் மீதான அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்