மனைவிக்கு குடிக்கும் காபியில் விஷத்தை கலந்த கணவன்... சிசிடிவி காமெராவில் சிக்கி அதிர்ச்சி காட்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் விவாகரத்து செய்த மனைவியை கணவன் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Brian Kozlowski. 46 வயதான இவர் அமெரிக்காவின் Michigan-ல் இருக்கும் Macomb Township பகுதியில் தன் மனைவி Therese Kozlowski-வுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலை இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து Therese Kozlowski-வை Brian Kozlowski கொலை செய்ய முயற்சித்துள்ளதாக கூறி அவர் புகார் கொடுத்துள்ளார்.

அதாவது ஒவ்வொரு நாள் காலையிலும் மனைவிக்காக டீ போடும் போது அந்த டீயில், விஷம் ஏதோ ஒன்றை ஊற்றுகிறார். இதன் காரணமாகத் தான் தனக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போவதாகவும், கண்மங்கலாக தெரிவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் இது தொடர்பான வழக்கு விசாரணை Macomb County Circuit நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், அவருக்கு 60 நாட்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அவர் காபியில் விஷம் கலக்கும் காட்சியை அவரது மனைவி தன் வீட்டில் இருந்த சிசிடிவி காமெராவில், பதிவாகியுள்ளதை ஆதரமாக கொடுத்துள்ளார். அவர் கணவன் மீது இருந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கமெராவை பொறுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்