கொளுத்தும் வெயில்... பூட்டிய காருக்குள் சிக்கி பிஞ்சு குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்: ஒரே மாதத்தில் 24 சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
220Shares

அமெரிக்காவின் டல்லாஸ் அருகே கொளுத்தும் வெயிலில் காருக்குள் சிக்கிய 9 மாத பெண் பிள்ளை பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டல்லாசின் ரிச்சர்ட்சன் நகர எல்லையில் அமைந்துள்ள Jupiter மற்றும் Arapaho சாலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காருக்குள் பிஞ்சு குழந்தை இருப்பதை மறந்த தந்தை, தமது காரினை சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றில் ஒப்படைத்து சென்றுள்ளார்.

ஆனால் அவர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை சலனமற்று கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கும் மருத்துவ உதவிக் குழுவினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்கு மாலை 5.15 மணியளவில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பிஞ்சு குழந்தை காருக்குள் எத்தனை மணி நேரம் சிக்கியிருந்தது என்பது தெரியவில்லை என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த வழக்கும்ப் பதியவில்லை என கார்லாண்ட் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் 24 குழந்தைகள் காருக்குள் சிக்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்