அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி குடும்பத்தை துரத்தும் துர்மரணங்கள்: மேலும் ஒருவர் மரணம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
227Shares

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் ராபர்ட் கென்னடியின், பேத்தி சயோரிஸ் தேவைக்கு அதிகமாக மருந்து உட்கொண்டதால் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்துக்கு உட்பட்ட ஹையானிஸ் பகுதியில் 22 வயதான சயோரிஸ் கென்னடி ஹில், குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

அவருக்கு உடல் நலம் பாதித்ததாக கூறி, கென்னடி குடும்பத்தினர் அங்குள்ள கேப் கோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சயோரிஸின் திடீர் மரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சயோரிஸ் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அவர் தேவைக்கு அதிகமாக மருந்துகளை எடுத்துக்கொண்டதன் காரணமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

போஸ்டன் கல்லூரியில் தொலைத்தொடர்பு படித்து வந்த அவர், ஜனநாயக மாணவர் அமைப்பின் துணைத் தலைவர் பதவி வகித்து வந்துள்ளார்.

கென்னடி குடும்பத்தை துரத்தும் துர்மரணங்களின் பட்டியலில் தற்போது 22 வயதான சயோரிஸ் கென்னடி ஹில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியும் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடியும் பொதுமக்கள் முன்னிலையிலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

உலகை உலுக்கிய கென்னடி படுகொலை நடந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில், அவருக்கு அடுத்த ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவும் நடந்தேறியது.

இந்த காட்சிகளை கென்னடியின் மனைவி ஜாக்கி தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கென்னடியின் கொலைகாரனை சம்பவம் நடந்து இரு தினங்களுக்கு பின்னர் பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவம் நடந்து 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனாதிபதி கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது கொலைகாரன் சிர்ஹான் சிர்ஹான் தற்போதும் கலிபோர்னியா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

1999 ஆம் ஆண்டு கென்னடியின் 38 வயதான மகன் தமது மனைவியுடன் சென்ற விமானம் கட்டுப்பாடை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். ஜான் எஃப் கென்னடியின் இன்னொரு சகோதரர் டெட் கென்னடி 1964 ஆம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதுடன், தொடர்ந்து 5 மாத காலம் மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு ஜான் கென்னடியின் மகனின் முன்னாள் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டார்.

கென்னடி குடும்பத்தில் பெரும்பாலானவர் படுகொலை செய்யப்பட்டும், விபத்திலும், தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ளது அந்த குடும்பத்தின் மீதுள்ள சாபமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்