அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்..! நான்கு பேர் பலி; நடந்தது என்ன?

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில், நான்கு பேர் உயிரிழந்ததுடன், இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸின் கார்டன் கிரோவில் உள்ள குடியிருப்பில், மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அங்கு தான் மறைந்து வைத்திருந்த கத்தியை கொண்டு, குறித்த மர்ம நபர் இரண்டு பேர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிய அவர், அருகில் உள்ள உணவகம் மற்றும் பெட்ரோல் நிலையத்தில் இருந்த பொதுமக்களையும் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார், 33 வயதான தாக்குதல்தாரியை கைது செய்தனர்.

அவரிடம் இந்த கொடூர தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்