பேருந்து நிறுத்தத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் நின்றிருந்த இரு இளம்பெண்களை மர்ம நபர் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் நகரிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் வியாழனன்று அரங்கேறியுள்ளது.

சம்பவத்தின் போது பிட்ஸ்பர்க் பேருந்து நிறுத்தத்தில் பெண் ஒருவர் தூக்கத்தில் இருந்துள்ளார்.

இதை கவனித்த ரோந்து பொலிசார் ஒருவர், அவரை அணுகிய நிலையில், திடீரென்று ஒருவர் கத்தியால் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் அவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அருகாமையில் நின்ற பெண்ணையும் அவர் கத்தியால் தாக்கியுள்ளார்.

சுதாரித்துக் கொண்ட பொலிசார் உடனடியாக அவரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி காயமடைந்த இரு பெண்களையும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இதில் கழுத்தில் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொருவர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார். கலிபோர்னியாவில் மர்ம நபர் கத்தியால் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன்னர் பிட்ஸ்பர்க் நகரில் வாள்வெட்டு சம்பவம் அரங்கேறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்