அமெரிக்காவில் பிரம்மாண்ட வீடு வாங்கும் பிரியங்கா சோப்ரா! விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Kabilan in அமெரிக்கா

நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் உள்ள 50 கோடி மதிப்பிலான வீட்டை விற்றுவிட்டு, அதை விட பிரம்மாண்டமான புதிய வீட்டை விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு, அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றில் குடியேறினர்.

நிக் ஜோனஸுக்கு சொந்தமான இந்த வீட்டின் மதிப்பு ரூ. 50 கோடி ஆகும். இதில் ஐந்து படுக்கை அறைகள், ஐந்து தனி குளியல் அறைகள், ஒரு நீச்சல் குளம், இரவு விருந்து நிகழ்ச்சிக்கு தனி பகுதி ஆகியவை உள்ளன.

ஆனால், இந்த வீட்டை பிரியங்கா - நிக் விற்றுவிட்டனர். இதுவே பெரிய வீடு தான் என்றாலும், இதை விட பிரம்மாண்ட இவர்கள் மாற உள்ளனர். அதன்படி, அதே பகுதியில் உள்ள சுமார் ரூ.140 கோடி மதிப்பிலான புதிய வீட்டை வாங்க உள்ளதாக ஹாலிவுட் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், நிக் ஜோனஸ் தனது சகோதரர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிக்கு திட்டமிட்டுள்ளதாலும், புதிய வீட்டை வாங்கினாலும் விருப்பத்திற்கு ஏற்ப உள் அலங்கார வேலைபாடுகள் செய்ய தாமதம் ஆகும் என்பதாலும், அடுத்த ஆண்டுதான் பிரியங்கா, நிக் ஜோனஸ் குடிபுகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்