வெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்து தமிழ் மாணவி செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in அமெரிக்கா

வெளிநாட்டில் படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர் தன்னுடைய பூர்வீக கிராமத்தை தத்தெடுத்துள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், மேல வெள்ளூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சரவணன்-சரளா தம்பதியின் மகள் தான் காவ்யா.

காவ்யா, அமெரிக்காவின் கலிபோர்னியாக மாகாணத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சரவணன்-சரளா தம்பதியினர் 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய குல தெய்வ கோவில் திருவிழாவிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மாணவி காவ்யா

கடந்த மாதம் காவ்யா அமெரிக்காவிலிருந்து தன்னுடைய கிராமத்திற்கு வந்த போது, அங்குள்ள முக்கிய நீர் ஆதாரமான பெரிய ஊரணி சீமை கருவேல மரங்களால் மண்டி, 10 ஆண்டுகளாக தூர் வாராமல், இருப்பதை பார்த்து சற்று கவலையடைந்துள்ளார் காவ்யா.

இதனால் அதன் பின் இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு காவ்யா கொண்டு சென்றதால், கிராமத்தில் தற்போது தூர் வாரும் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து தற்போது அமெரிக்காவில் இருக்கும் காவ்யா கூறுகையில், அந்த ஊரணியை பார்த்த குப்பைகள் அதிகமாக இருந்தது.

இதனால் நம்மளே சுத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன், இதனால் இது குறித்து அப்பாவிடம் சொன்னேன். அதன் பின் அங்கிருக்கும் கிராமத்தினரிடம் சென்று இது குறித்து கூறிய போது, சுத்தம் செய்வது எல்லாம் பிரச்சனையில்லை, அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து, இது குறித்து மனு அளித்து, இதைப் பற்றி பேசி, அனுமதி பெற்று வேலைகள் எல்லாம் ஆரம்பித்தோம். தண்ணீர் பற்றாக்குறை தமிழ்நாட்டில் நிறைய இருக்கிறது.

குறிப்பாக நாங்கள் மதுரையில் இருக்கும் போது, தண்ணீர் வெளியில் வாங்கி தான் பயன்படுத்தினோம். இது போன்று சிறிய முயற்சி தான் அனைத்துக்கும் வழியாக இருக்கும், அதுமட்மின்றி இது போன்ற ஊரணிகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாணவியின் இந்த முயற்சியால் தற்போது தூர்வாரப்பட்டு, ஊரணியில் சில இடங்களில் தண்ணீரில் நிரம்பி வருவதால், அவருக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகள் பலரும் பாராட்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்