அமெரிக்காவில் இந்திய இளைஞருக்கு சிறைத்தண்டனை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்க கல்லூரியில் கணினிகளை சேதப்படுத்தியதாக இந்திய இளைஞருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அல்பேனியில் உள்ள செய்ன்ட் ரோஸ் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த 27 வயதான விஸ்வநாத் அகுதோடா பயின்று வருகிறார்.

இவர் கடந்த பிப்ரவரி 14ம் திகதியன்று கல்லூரிக்கு சொந்தமான 66 கணினிகள் மற்றும் ஏராளமான கணினி மானிட்டர்களில் "யு.எஸ்.பி கில்லர்" சாதனத்தை சொருகி யுஎஸ்பி போர்ட்களை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பிப்ரவரி 22 அன்று வட கரோலினாவில் கைது செய்யப்பட்ட விஸ்வநாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் விஸ்வநாத் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஓராண்டு சிறைத்தண்டனையும் 58,471 டொலர்கள் அபராதமும் விதித்து நீதிபதி கிராண்ட் சி ஜாகித் தீர்ப்பளித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்