அமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தொலைக்காட்சி.. சிசிடிவியில் பதிவான மர்ம மனிதனின் செயல்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில், மக்களின் வீட்டு வாசல்களில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை மர்ம மனிதன் வைத்துவிட்டு செல்லும் சம்பவம் நடந்துள்ளது.

வெர்ஜீனியாவில் கடந்த திங்கட்கிழமையன்று, மக்கள் பலர் தங்கள் வீட்டு வாசல்களில் பழைய தொலைக்காட்சி பெட்டி இருப்பதை கண்டுள்ளனர்.

ஆனால், அதனை வைத்தது யார் என்று தெரியாத நிலையில், வாசலில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பார்த்தபோது தலையில் தொலைக்காட்சி பெட்டியை அணிந்தபடி வினோத நபர் ஒருவர், தான் கொண்டு வந்த தொலைக்காட்சியை வாசலில் வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது.

இரவு நேரத்தில் வந்த அந்த வினோத நபர், சுமார் 60 பழைய தொலைக்காட்சி பெட்டிகளை அங்கு வசிக்கும் குடிமக்களின் வீட்டு வாசல்களில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

கண்காணிப்பு கமெராவில் அவரது உருவம் பதிவானாலும், அவர் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இதேபோன்று மற்றொரு சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் நடந்ததாக கூறப்பட்டது.

குறித்த வினோத நபரை, அப்பகுதி மக்கள் ‘TV Santa Claus’ என்று அழைக்கின்றனர். அத்துடன் அவரது செயலை குற்றமாக கருதாமல், குறும்புத்தனமாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

மேலும், குறித்த வினோத நபர் எந்த விதமான சட்ட மீறுதல்களிலும் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers