அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பாம்பு ஒன்று சொந்த உடலின் பாதி விழுங்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
பென்சில்வேனியாவில் ஊர்வான சரணாலயத்திலே இந்த ஆபூர்வ காட்சி படமாக்கப்பட்டுள்ளது. குறித்த சரணாலயத்தில் பாம்புகள், ஆமைகள் என ஊர்வன உயிரினங்கள் பல பாதுகாக்கப்படுகிறது. குறித்த வீடியோவை, பாம்பு வல்லுநரான ஜோதக்கர் தனது செல்போன் மூலம் பேஸ்புக் நேரலையில் வெளியிட்டுள்ளார்.
ஜோதக்கர் கூறியதாவது, பொதுவாக சில பாம்புகள் பசி வந்தால், மற்ற பாம்புகளை விழுங்கும். சில நேரங்களில் அரிதாக தன்னைத்தானே விழுங்கவும் பாம்புகள் முயற்சிக்கின்றன.
ஆனால் இந்தப் பாம்பு சரணாலயத்தில் சரியாக பராமரிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் இப்படி நடந்து கொண்டது எனத் தெரியவில்லை. அது மனதளவில் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அந்தப் பாம்பு தன்னைத்தானே விழுங்க முயற்சிப்பதும், பின்னர் பாம்பு வல்லுநர் ஜோதக்கர் அதனை விடுவித்து காப்பாற்றுவதும் பதிவாகி்யுள்ளது. அந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களுடைய ஆச்சரியத்தை பதிவு செய்து வருகின்றனர்