ஒரு நாட்டையே விலைக்கு வாங்கும் அமெரிக்கா... இந்த நாடா! கசிந்தது டிரம்பின் ரகசியம்

Report Print Basu in அமெரிக்கா

வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கிரீன்லாந்து நாட்டை விலைக்கு வாங்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அமெரிக்க நிலப்பரப்பை விரிவுபடுத்துவதின் நோக்கமாக கிரீன்லாந்து தீவை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த யோசனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உதவியாளர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் தனிப்பட்ட முறையில் விவாதித்துள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் உள்ள தன்னாட்சி கொண்ட டென்மார்க் நிலப்பரப்பான கீரின்லாந்து நாட்டை வாங்குவதற்கான, டிரம்பின் யோசனையை சில ஆலோசகர்கள் நகைச்சுவையாக கருதினாலும், மற்றவர்களால் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

நியூ ஜெர்சியிலுள்ள பெட்மின்ஸ்டரில் உள்ள தனது கோல்ஃப் கிளப்பில் விடுமுறையில் இருக்கும் டிரம்ப், செப்டம்பர் மாத தொடக்கத்தில் டென்மார்க்கிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

ஆனால். இதன்போது டென்மார்க் அதிகாரிகளுடன் கிரீன்லாந்து வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கிரீன்லாந்தில் உள்ள துலே விமானம் தளம் அமெரிக்க ராணுவத்தால் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீன்லாந்து வாங்குவதற்கான யோசனையை முதலில் the Wall Street Journal பத்திரிக்கை வெளியிட்டது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் 1946-ல் கிரீன்லாந்தை 100 மில்லியன் டாலருக்கு வாங்க முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்