தாயின் பின்னால் ஓடி வந்த சிறுவன், சில நிமிடங்களில் பிணமாக கிடந்த காட்சி: மனதை கலங்கச் செய்யும் செய்தி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் தன் பின்னால் ஓடி வந்த மகன் கார் மோதி பிணமாக கிடப்பதைக் கண்ட தாய் அதிர்ச்சியில் உறைந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

டெக்சாசைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான Gissel Vazquez (18), தனது அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு செல்லும்போது, கார்கள் நிறுத்தும் இடம் வழியாக நடந்து போயிருக்கிறார்.

வெளியிடப்பட்டுள்ள CCTV கமெரா காட்சிகளில், Gissel கையில் தனது இரண்டாவது குழந்தையுடன் கார் நிறுத்துமிடத்தைத் தாண்டிச் செல்வது தெரிகிறது.

அவரைத் தொடர்ந்து ஒரு சிறுவன் அவர் பின்னால் ஓடி வருகிறான். அது Gisselஇன் உறவினரின் மகன்.

அதற்கு பின்னால் வெகு தொலைவில் Gisselஇன் மூத்த மகனான 18 மாதச் சிறுவன் Alan Villeda ஓடி வருகிறான். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் புறப்படுகிறது.

அவ்வளவுதான் சிறிது நேரத்தில் தனது மகன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு ஓடி வந்திருக்கிறார் Gissel.

ஆனால் அதற்குள் Alan இறந்து விட்டிருக்கிறான். Alan இறந்த அதிர்ச்சியில் Gissel மயங்கி விழ, அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்கிறது.

குழந்தையை கவனக்குறைவாக விட்டு, அவனது உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக Gissel மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

என்றாலும், அவரது இரண்டாவது குழந்தையாகிய இரண்டு மாத பெண் குழந்தையை அவர் கவனிக்க வேண்டியுள்ளதால், Gissel தற்போது சிறையிலடைக்கப்படவில்லை.

அத்துடன் அந்த குழந்தையையும் அவர் பொலிசாரின் கண்காணிப்பின் கீழ்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Gisselக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடரும் விசாரணையில் அவர் சிறைக்குத்தான் செல்ல வேண்டும் என முடிவானால் Gissel 10 ஆண்டுகள் சிறையில் செலவிட வேண்டியிருக்கும்.

பொலிசார் தொடர்ந்து சிறுவன் மீது காரை மோதிய நபர் உட்பட பலரை விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்