கிரீன்லாந்து நாட்டை வாங்கிவிட்டேன்.. எத்தனை பில்லியன் தெரியுமா..! டிரம்ப் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in அமெரிக்கா

கிரீன்லாந்தை டென்மார்க் நாட்டிடமிருந்து 15 பில்லியன் டாலருக்கு வாங்கியதாக கிண்டலடிக்கும் வகையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கிரீன்லாந்து நாட்டை விலைக்கு வாங்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது.

கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்காக வாங்குவதற்கான ஒரு தனிப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க டிரம்ப் முயன்றபோது, விற்பனைக்கல்ல என்ற பதிலை அந்நாட்டு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கிரீன்லாந்தின் பிரதமர் கிம் கீல்சன்: ஜனாதிபதியின் மனம் நமது பனிக்கட்டியை விட வேகமாக உருகிக் கொண்டிருக்கிறது தெளிவாக தெரிகிறது என கருத்து தெரிவித்தார்.

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், கற்பனையால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நபரிடமிருந்த கடவுள் நம்மை விடுவிப்பார் என டிரம்பிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மேற்கு வர்ஜீனியாவில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் உறையாற்றிய டிரம்ப், நண்பர்களே, என்னை நம்புங்கள், நீங்கள் கிரீன்லாந்தை நேசிக்கப் போகிறீர்கள்.

நான் பல முறை அங்கு சென்று இருக்கிறேன். நான் 9/11 தாக்குதல் அன்று அங்கு இருந்தேன், தாக்குதலில் ஈடுபட்ட விமானங்களை நிறுத்த முயற்சித்தேன். இது எல்லாம் உண்மைதான், நியூயார்க் டைம்ஸில் நீங்கள் இதைப் படித்ததில்லை என கிண்டிலத்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்