கண் முன்னே தோன்றிய மரணம்... மயிரிழையில் மிரள வைத்த நபர்: சிசிடிவி-யில் பதிவான அதிசய காட்சி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் மோசமான காலநிலை நிலவி வரும் நிலையில் நபர் ஒருவர் மயிரிழையில் மரணத்திலிருந்து தப்பித்த காட்சி வெளியாகியுள்ளது.

அட்ரியன் நகரத்தில் இந்த வாரம் இடியுடன் கூடிய மழையின் போது ரோமலஸ் மெக்னீல் என்ற நபர் அடி வித்தியாசத்தில் மரணத்திலிருந்து உயிர் தப்பித்துள்ளார்.

குறித்த வீடியோவில், கடும் மழை பொழிந்து கொண்டிருக்க. மெக்னீல் குடையை பிடித்த படி நடந்து வருகிறார். அப்போது. திடீரென அவருக்கு அருகில், கண் முன்னே மின்னல் தாக்குகிறது. பீதியடைந்த மெக்னீல் குடையை கீழே போட்டு தடுமாறுகிறார்.

பின்னர், என்ன நடந்தது என்று தெரியாமல் குடையை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு மழைகாலத்தில் மின்னல் தாக்கி சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்