கோபத்தில் சிறு பிள்ளை முன் ஆபாசமாக நடந்து கொண்ட இளம்பெண்: பொலிஸ் தேடியதால் சரணடைந்தார்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கடற்கரையில் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணிடம், சிறு பிள்ளைமுன் அரை நிர்வாணமாக இருப்பது முறையல்ல என்று அந்த சிறுமியின் தாய் கூற, அந்த பெண்ணோ கோபத்தில் தான் உடுத்தியிருந்த சிறு உள்ளாடையையும் அவிழ்த்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.

அத்துடன் அந்த இளம்பெண் அளவுக்கதிகமாக குடித்தும் இருந்தார்.

இதனால், அவரிடம் அறிவுரை கூறிய பெண் அதிர்ச்சியடைந்து பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

சிறு குழந்தை முன் நிர்வாணமாக, அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் அந்த இளம்பெண், ஒருவரை மிரட்டி பணம் பறிக்க முயன்று சிறைக்குச் சென்ற, சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி பிரபலமான Robert 'Joe' Halderman என்பவரின் மகளான Anna Lee Halderman என்பது தெரியவந்தது.

Anna Lee Halderman

இந்நிலையில் அமெரிக்காவின் Norwalk என்னும் பகுதியைச் சேர்ந்தவரான Anna பொலிசாரிடம் சரணடைந்தார்.

பொலிசாரிடம் மன்னிப்புக் கோரிய அவர், என்ன நடந்தது என்பது தனக்கு நினைவில்லை என்று தெரிவித்தார்.

ஒரு குழந்தையின் மனதை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், பொது அமைதியைக் குலைத்ததாகவும் Anna மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

50,000 டொலர்கள் பிணைத்தொகை செலுத்தியதையடுத்து ஜாமீனில் விடப்பட்டுள்ள Anna, வரும் வெள்ளியன்று Norwalk நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் ஆக இருக்கிறார்.

Robert 'Joe' Halderman

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்