ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் வியக்க வைக்கும் செயல்: கொண்டாடும் சமூக வலைதளம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் பயமேதும் இன்றி கவர்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் தற்போது பலரது கவனத்கையும் ஈர்த்து வருகிறது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் சில வேளைகளில் சர்வதேச கவனத்தைப் பெற்றுவிடும்.

இதற்காக பலர் பல நூதன வழிகளை தேடுவதும் உண்டு. அவ்வாறாக நடத்தப்பட்ட ஒரு காட்சியே தற்போது சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நியூயார்க் நகரில் குடியிருக்கும் ஜெசிகா ஜார்ஜ் என்பவரே அந்த புகைப்பட தொகுப்புக்காக ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்டவர்.

இவரது இந்த சாகசத்தை சக பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் இவ்வாறு படு கவர்ச்சியாக புகைப்படத்திற்கு முகம் காட்டுவது என்பது உண்மையில் துணிவான செயல் என பலரும் பாராட்டியுள்ளனர்.

அந்த புகைப்படங்களை ஜெசிகாவே தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். ஆனால் ஜெசிகாவை கடுமையாக விமர்சனம் செய்தும் சிலர் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்