15 வயது சிறுவனை மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்த 32 வயது பெண்... கிடைத்த தண்டனை?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் அத்தையை கொலை செய்த குற்றம் மற்றும் 15 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர் Elizabeth Sanchez. 32 வயதான இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் Queens home-ல் தன்னுடைய 50 வயது அத்தை Maria Palaguachi-ஐ கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 2016 முதல் மார்ச் மாதம் 2017-ஆம் ஆண்டு வரை உறவினரின் 15 வயது சிறுவனை வீட்டில் வைத்து மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த இரண்டு குற்றத்தையும் அவர் ஒப்புக் கொண்டதால், அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட Maria Palaguachi தன்னுடைய உறவினருடன் தங்கியிருந்தார். ஆனால் 15 வயது சிறுவனின் எதிர்காலத்தை கருதி அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers