கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த பெண் ’உயிர் பெற்ற’ சம்பவம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பார்ட்டி ஒன்றிற்கு சென்ற ஒரு பெண் கண் விழித்தபோது தான் ஒரு குளிர்பதனப் பெட்டிக்குள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

அமெரிக்காவின் Clevelandஇல் உள்ள ஒரு வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றிற்கு சென்ற அந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் வரை சுய நினைவின்றி இருந்த அந்த பெண், கண் விழிக்கும்போது தான் ஒரு குளிர்பதனப் பெட்டிக்குள் இருப்பதை அறிந்து அதிர்ந்துபோய், மெதுவாக அதன் கதவைத் திறந்துள்ளார்.

அப்போதுதான் தனக்கு போதைப்பொருளைக் கொடுத்து தன்னைக் கொல்வதற்காக குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்து யாரோ மூடியிருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது.

அவர் அங்கிருந்து தப்ப முயலும்போது அந்த வீட்டிலிருந்த Eric Glaze (41) என்னும் நபர் அந்த பெண்ணைத் துரத்தியிருக்கிறார்.

வீட்டுக்கு வெளியில் நின்ற ஒரு காரில் ஏறித் தப்ப முயன்ற அந்த பெண், காரை ஒரு இடத்தில் மோதிவிட்டார்.

பொலிசார் வேகமாக சென்ற அந்த காரைப் பின்தொடர்ந்து வந்ததால் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டிருக்கிறார்கள்.

அவர் காரை மோதியதும், அவரை மற்றொரு காரில் துரத்தி வந்த Eric Glaze பின்வாங்கி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னர் Eric Glaze கைது செய்யப்பட, குளிர்பதனப் பெட்டிக்குள் இரண்டு நாட்கள் இருந்ததால் frostbite என்னும் பிரச்சினையால் கடுமையாக பதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்