திருமணம் முடிந்த சில நிமிடங்களில் உயிரிழந்த புதுமண தம்பதி... நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் திருமணமான சில நிமிடங்களில் புதுமணதம்பதி கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Texas மாகாணத்தை சேர்ந்தவர் ஹார்லே ஜோ மோர்கன். இவரும் மேரி என்ற இளம் பெண்ணும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி நேற்று நீதிமன்றத்தில் உள்ள அறையில் நீதிபதிக்கு முன்னால் மோர்கனுக்கும், மேரிக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் அதற்கான பதிவேட்டில் இருவரும் கையெழுத்திட்டனர்.

பின்னர் புதுமணதம்பதியினர் வாசலில் இருந்த வாகன நிறுத்துமிடத்தில் இருந்த காரில் ஏறி கிளம்பினர்.

அப்போது அங்கு வேகமாக வந்த டிரக் லொறி ஒன்று காரின் மீதி பயங்கரமாக மோதியதில் மோர்கனும், மேரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் தம்பதி உயிரிழந்தது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கார் மீது மோதிய லொறி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்