கலிபோர்னியாவில் வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு இளைஞரின் காலை, விஷப்பாம்பு ஒன்று பதம் பார்த்தது.
தனது மொபைல் போனைப் பார்த்தவாறே Bryce Russell(19) என்னும் அந்த இளைஞர் வீட்டை விட்டு வெளியே வர, வாசலிலிருந்த நாற்காலி ஒன்றின் கீழ் மறைந்திருந்த பாம்பு ஒன்று அவரை கொத்த, அதிர்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடியுள்ளார் அந்த இளைஞர்.
அதிர்ஷ்டவசமாக Russellஇன் தாயும் சகோதரியும் நர்ஸ்களாக பணியாற்றுவதால் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
24 சிறு போத்தல்கள் நச்சு முறிவு மருந்து கொடுக்கப்பட்டு, இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்னரே, Russellஇன் நிலைமை சீரடைந்தது.
இதற்கிடையில் பாம்பின் தலையை வெட்டிய Russellஇன் சகோதரி, அதன் தோலை பெல்ட் செய்வதற்காக கடையில் கொடுத்துள்ளார்.