மைதானத்தில் மின்னல் தாக்கியதில் ரசிகர்கள் காயம்: அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள கோல்ப் மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் ரசிகர்கள் பலரும் காயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள உள்ளூர் தகவல்களின்படி, ஈஸ்ட் லேக் கோல்ஃப் கிளப் மைதானத்தில் நடந்த ஃபெடெக்ஸ் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்றின்போது மோசமான வானிலை காரணமாக போட்டி ஞாயிற்றுக்கிழமையன்று மாற்றம் செய்யப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் திடீரென மரத்தின் மீது மின்னல் தாக்கியதில், அதன் கீழே நின்று கொண்டிருந்த ரசிகர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் உயிருக்கு ஆபத்தான காயங்களை பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மின்னல் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்