சர்வதேச விண்வெளி மையத்தில் வீராங்கனை செய்த மோசமான செயல்! பாய்ந்த விசாரணை

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஒருவர், முன்னாள் தன் பாலின துணையின் வங்கி கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அனுமதியின்றி இயக்கியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

கனடா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை விண்வெளியில் அமைத்துள்ளன. இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்கியிருந்து விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுடன் அமெரிக்காவைச் சேர்ந்த வீராங்கனையான அன்னே மெக்லைனும் ஆய்வில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த யூன் மாதம் அன்னே பூமிக்கு திரும்பினார். இந்நிலையில், அவர் விண்வெளியில் இருந்தபோது குற்றச்செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

அன்னே தனது முன்னாள் தன் பாலின் துணையின் வங்கிக் கணக்கை, அனுமதியின்றி விண்வெளியில் இருந்தே கையாண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகாரை அன்னேவின் தன் பாலின் துணை அளித்ததைத் தொடர்ந்து, நாசா விண்வெளி ஆய்வு மையம் அவரிடம் விசாரணை நடத்த உள்ளது. விண்வெளி மையத்தில் நடந்த முதல் குற்றம் இது என்று கூறப்படுகிறது.

AP Photo/Pavel Golovkin

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers