காதலியை கொன்று இதயத்தை சமைத்து சாப்பிட்ட நபர்: குற்றவாளியா மனநோயாளியா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது காதலனின் கடந்த கால வாழ்க்கையைக் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்ற காதலி அவரை தன்னை விட்டு விலகச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அந்த காதலனோ காதலியை வன்புணர்ந்து, கொன்று அவளது உடலும் முக்கிய உள்ளுறுப்புக்களை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்தது அமெரிக்காவில், இண்டியானாவைச் சேர்ந்த Tammy Jo Blantonக்கு, தனது காதலன் Joseph Oberhansley (38)இன் கடந்த காலம் குறித்த உண்மைகள், அவரை காதலிக்கத் தொடங்கிய பின்னர்தான் தெரியவந்துள்ளன.

அவர் கொலைக்குற்றம் ஒன்றிற்காக 12 ஆண்டுகள் சிறையிலிருந்தார் என்ற தகவல் கிடைக்க, அவர் எதற்காக சிறை சென்றார் என்ற உண்மை தெரியவந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் Tammy.

Joseph தனது குழந்தையை கருவில் சுமந்த பெண்ணைத்தான் கொலை செய்துள்ளார்.

இந்த விடயம் தெரிந்ததும் அதிர்ந்துபோய், தனது வாழ்க்கையிலிருந்து வெளியேறும்படி Josephஐக் கேட்டுக் கொண்டுள்ளார் ammy.

ஆனால் அதற்கு சம்மதிக்காத Joseph, Tammyயை பிடித்து அடைத்து வைத்து தொடர்ந்து வன்புணர்ந்திருக்கிறார்.

Tammy வேலைக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது சக ஊழியர்கள், பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

பொலிசார் Tammyயைத் தேடி வரும்போது, அவரது வீட்டு வாசலில் இரத்தக்கறை படிந்த உடை, கத்தியுடன் இருந்திருக்கிறார் Joseph.

பொலிசார் கேட்ட உடனேயே தான் Tammyயை கொலை செய்து விட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார் Joseph.

ஆனால் அதற்குப்பின் அவர் கூறியவற்றை, மூத்த அனுபவம் மிக்க பொலிசாராலேயே காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.

தனது காதலியைக் கொலை செய்து அவரை துண்டு துண்டாக வெட்டியதாக தெரிவித்த Joseph, மரத்தை வெட்டும் மின்சார அரத்தால் Tammyயின் மண்டை ஓட்டை பிளந்து, அவரது மூளையை எடுத்து அதில் ஒரு பகுதியை பச்சையாக சாப்பிட்டதாகவும், மீதி முளை, மற்றும் Tammyயின் இதயம், நுரையீரல் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

குளியலறையில், குளிக்கும் தொட்டிக்குள் Tammyயின் மீதி உடல் துண்டுகளாக்கப்பட்டு கிடந்துள்ளது.

Josephஐ கைது செய்த பொலிசார் அவரை காவலில் அடைத்த நிலையில், அவர் குற்றவாளியா அல்லது மன நோயாளியா என்ற கோணத்தில் நீதிமன்றத்தில் வாதம் நடந்து வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்