திருட வந்த இடத்தில் தனது குழந்தையை மறந்து விட்டுச்சென்ற பெண்! சிசிடிவியில் பதிவான காட்சி

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில், கடை ஒன்றில் திருட வந்த பெண் தனது குழந்தையை அங்கேயே மறந்து விட்டுச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நியூஜெர்சியின் மிடில்டவுன் பகுதியில் பாம்பி பேபி என்ற கடை உள்ளது. இங்கு 3 பெண்கள் குழந்தைகளுடன் சென்றுள்ளனர். அவர்களில் இரண்டு பெண்கள் கடை ஊழியரிடம் பேச்சு கொடுத்தபோது, மற்றொரு பெண் குழந்தையை வைத்து அழைத்துச் செல்லும் வண்டி ஒன்றை திருடிச் சென்றுள்ளார்.

ஆனால், அவர் தனது குழந்தையை மறந்து கடையிலேயே விட்டுச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து 6 நிமிடங்களில் கடைக்கு திரும்பிய அப்பெண், தனது குழந்தையை அழைத்து சென்றுள்ளார்.

இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிசார், கடைக்கு வந்த பெண்களில் 2 பேரை கைது செய்தனர்.

மேலும் திருடப்பட்ட வண்டி கடை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர் கூறுகையில்,

‘குழந்தையை கூட மறந்துவிட்டு வண்டியை பெண்கள் திருடிச் சென்றது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றும் அறியாத குழந்தையை வைத்துக் கொண்டு இதுபோன்ற சம்பவத்தில் யாரும் இனி ஈடுபடக் கூடாது என்பதற்காக சிசிடிவி காட்சிகளை பகிர்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்