படுகொலை செய்யப்பட்ட மனைவி, மகன்: 1 மில்லியன் டொலருக்காக சட்டப்போராட்டம் நடத்தும் கணவன்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் மகனின் ஆயுள் காப்பீட்டு பணத்தை பெறுவதற்காக இந்திய தந்தை சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்த ராவ் நர்ரா, அமெரிக்காவில் தன்னுடைய மனைவி சசிகலா நர்ரா (38) மற்றும் 6 வயது மகன் அனிஷ் உடன் வசித்து வந்தார்.

கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஹனுமந்த ராவ் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, அவருடைய மனைவியும், மகனும் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து கடந்த இரன்டு ஆண்டுகளாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நபரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், கொலை சம்பவம் குறித்து தகவல் கொடுத்தால் 25,000 டொலர்கள் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில் மனைவி, மகன் படுகொலை செய்யப்பட்ட நாற்பத்தாறு நாட்களுக்குப் பிறகு, இருவரின் ஆயுள் காப்பீட்டுக் தொகையை ஹனுமந்த ராவ் வசூலிக்க முயன்றார். ஆனால் 1 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய ஆயுள் காப்பீட்டு பணத்தை ப்ருடென்ஷியல் நிதி நிறுவனம் கொடுக்க மறுத்துவிட்டது.

ஹனுமந்த ராவ் இந்தக் குற்றத்தில் சந்தேக நபர் என பொலிசார் அடையாளம் காணவில்லை என்றாலும், காப்பீட்டு நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் கூறுகையில், நிலுவையில் உள்ள விசாரணையில் அவர் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் மாஜிஸ்திரேட் நீதிபதி கேத்தி வால்டோ, ஒரு மில்லியன் ஆயுள் காப்பீட்டு பணத்தையும் நீதிமன்ற கணக்கில் வைக்குமாறும், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்ட பிறகே ஹனுமந்த ராவிற்கு வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்