2 பெண்கள்.. ஒரு குழந்தை படுகொலை: பொலிசாரையும் கொல்ல விரட்டிய நிர்வாண மனிதன்!

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவின் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக பொலிசாரையும், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மற்றும் நிருபரையும் தாக்க விரட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Virginia, Pittsylvania பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நடைபாதையில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு கிடந்தை கண்ட அக்கம் பக்கத்தினர். பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்து பொலிசார் நடத்திய சோதனையில், வீட்டிற்குள் மற்றொரு பெண் மற்றும் ஒரு குழந்தை கொல்லப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடல்களை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தொலைக்காட்சி நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்தை நேரலையில் படமெடுத்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு திடீரென நிர்வாணமாக ஓடி வந்த இளைஞர் ஒருவர், பொலிசாரை தாக்க விரட்டியுள்ளார்.

பின்னர், ஒளிப்பதிவாளரை விரட்டியுள்ளார், இதனையடுத்து அங்கிருந்த வயதான தேவாலய ஊழியரை நிர்வாணமாக தாக்கியுள்ளார். பின்னர், பொலிசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் 19 வயதான Matthew Bernard என தெரியவந்துள்ளது. மேலும், மூன்று படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, மேலும், கொலையைத் தூண்டியது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பலியானவர்கள் அனைவரும் Bernard-க்கு தெரிந்தவர்கள் என்று நம்பப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்