கவர்ச்சி படங்களை வைத்து சம்பாதித்து வந்த இளம்பெண்ணுக்கு வந்த சோதனை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
144Shares

மனதுக்கு அமைதி தரும் வீடியோக்களை வெளியிடும் அமெரிக்க இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிப்படங்களை வெளியிடுவதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.

Kaitlyn Siragusa (25) என்னும் அந்த அழகிய இளம்பெண்ணை 1.6 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள்.

சமீபத்தில் Kaitlynஇன் பல புகைபடங்கள் சமூக நெறிமுறைகளை மீறியதாக அகற்றப்பட்டிருந்தன. பின்னர் அவருக்கு ஒரு இமெயில் வந்தது.

அந்த இமெயிலில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சார்பில் பணியாற்றுவதாக தெரிவித்த ஒரு நபர் Kaitlynஇன் புகைப்படங்கள் அகற்றப்படாமல் இருக்க வேண்டுமானால் தனக்கு மாதம் ஒன்றிற்கு சுமார் 2,600 டொலர்கள் தரவேண்டும் என்று கேட்டிருந்தார்.

உங்களுடைய இடுகைகளும் செய்திகளும் சமீப காலமாக அகற்றப்பட்டு வருவதை கவனித்திருப்பீர்கள்.

இது தொடர்பாக நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று அந்த இமெயிலில் கூறப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து ஏஜண்ட் ஒருவர் மூலம் பேஸ்புக் பிரதிநிதி ஒருவரை தொடர்பு கொண்டார் Kaitlyn.

அப்போது பேஸ்புக் விதிகளின்படி, பாலியல் எண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய படங்கள் என்பதாலேயே அவரது படங்கள் அகற்றப்பட்டதாக பேஸ்புக் பிரதிநிதி தெரிவித்தார்.

இதை பயன்படுத்தியே அந்த மர்ம நபர் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றது Kaitlynக்கு தெரியவந்தது.

எப்படியும், ஒவ்வொருமுறை விதியை மீறியதாக ஒரு படம் அகற்றப்படும்போதும், அதை தொடர்ந்து 14 நாட்களுக்கு Kaitlynஆல் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகமுடியாது.

தன்னை ஏமாற்ற முயன்றவரிடம் தப்பினாலும், தனது வருமானத்திற்கு பிரச்னை ஏற்படுவதிலிருந்து Kaitlynஆல் தப்ப முடியவில்லை என்பது மட்டும் உண்மை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்