மூன்று முறை கருச்சிதைவு... மனமுடைந்த கடைசியில் கிடைத்த இன்ப அதிர்ச்சி!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

மூன்று கருச்சிதைவுகளால் மனமுடைந்து இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என முடிவெடுத்த தாய்க்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தை சேர்ந்த கோல்பி(27) - டேனா சில்ட்ரஸ் (28) என்கிற தம்பதியினர், கருவுறாததால் விரக்தியடைபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தினை பகிர்ந்துள்ளார்.

டேனாவிற்கு 2015ம் ஆண்டு முதல் குழந்தையாக லிங்கன் பிறந்துள்ளார். 7 மாத குழந்தையாக இருந்த போது இன்னும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த 7 மாதங்கள் கழித்து டேனா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால் அந்த மகிழ்ச்சியை டேனாவால் நீண்ட நாட்கள் கொண்டாட முடியவில்லை. 6 வாரத்திலே கரு கலைந்துள்ளது.

அந்த துயரம் நடந்த சில நாட்களிலே மீண்டும் கர்ப்பமடைந்த டேனாவிற்கு, 4 வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மற்றொரு முறையும் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த டேனா வீட்டிலே முடங்க ஆரம்பித்துள்ளார்.

நான்கு பெண் மருத்துவர்களை சந்தித்து சோதனை மேற்கொண்ட போது, ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான காரணங்களை கூறியுள்ளார்.

இனி குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லை என கருதிய தம்பதியினருக்கு ஒரு மருத்துவர் மட்டும் ஆறுதலான வார்த்தைகளை கூறியுள்ளார். அவருடைய உடல் மற்றும் இரத்தத்தில் எந்த குறைபாடும் இல்லை என்று சில மருந்துகளை போதிய அளவு எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அதேசமயம் இந்த மருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க 30 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

அதன்படி மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்ட டேனா, அடிக்கடி பரிசோதனையும் பெற்று வந்தார். பல முயற்சிகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டேனா மீண்டும் கர்பமடைந்துள்ளார்.

மருத்துவனைக்கு சென்ற போது முதலில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல உள்ளே 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தம்பதியினர் இன்னும் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் அவர்களுக்கு ஓட்டோ, வில்லோ, சைமன் மற்றும் வில்லிஸ் என நான்கு குழந்தைகள் பிறந்தன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்