அரசின் புதிய முடிவால் அமெரிக்க ராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ராணுவத்திற்காக அயல்நாடுகளில் பணியாற்றுபவர்கள் ,அந்நாடுகளில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் பெற்றோரில் ஒருவர் அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால், அதனை வைத்து தங்கள் குழந்தைக்கும் குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம்.

அமெரிக்க ராணுவத்தினர் அயல்நாடுகளில் பணியாற்றும்போது, அங்கு குழந்தை பெற்றுக்கொண்டால் அதற்கும் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் இதுவரை சிக்கல் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த நடைமுறையை மாற்ற அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் அயல்நாடுகளில் தங்கியிருக்கும் அமெரிக்க பணியாளர்கள், ராணுவத்தினர் வழக்கமாக பிறர் விண்ணப்பிப்பது போல் குடியுரிமைக்கு இனி விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

அக்டோபர் 29ஆம் திகதி முதல் இந்த நடைமுறையை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு இந்த புதிய நடைமுறை கவலையளிக்க உள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அத்துடன் இந்த திட்டத்திற்கு எதிராக பலரும் நீதிமன்றங்களில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்