மெக் டொனால்ட்ஸ் உணவகத்திற்குள் ஒரு மகளிர் WWF: ஒரு வைரல் வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவிலுள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகம் ஒன்றினுள் பெண் ஒருவர் ஒரு ஆணை பந்தாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிரபலங்கள் சிலர் அதைப்பார்த்து, அந்த பெண்ணை குத்துச் சண்டை அணிகள் தொடர்பு கொள்ளலாம் என விமர்சிக்கும் அளவுக்கு சிறப்பாக இருந்தது அவரது தாக்குதல் முறை.

வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒருவரை தூக்கி வீசும் அந்த பெண், அந்த நபர் சுதாரித்துக் கொள்வதற்கு கொஞ்சமும் இடமளிக்காமல் மீண்டும் மீண்டும் அவரைப் பிடித்துத் தள்ளி விடுகிறார்.

பின்னணியில் நிற்பவர்கள் இந்த சண்டையைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதோடு முடிவடைகிறது அந்த வீடியோ.

முன்னாள் அமெரிக்க கால்பந்து வீரரான Geoff Schwartz அந்த வீடியோவை பகிர்ந்துள்ளதோடு, 'Wide base, good natural leverage, powerful punch and willing to finish’ என குத்துச்சண்டை பாணியில் விமர்சித்து, விரைவில் குத்துச்சண்டை அணிகள் அந்த பெண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்