நெஞ்சின் மீது துப்பாக்கி... கெத்தாக சிகரெட்டை பற்ற வைத்து கொள்ளையன் முகத்தில் புகைவிட்ட நபர்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள பார் ஒன்றில் ஆயுதமேந்திய கொள்ளையன் நுழைந்து கொள்ளையடித்த போது, நபர் ஒருவர் சிகரெட்டை பற்ற வைத்து கெத்தாக பிடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

St. Louis நகரில் உள்ள பழமையான பாரிலே இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. Tony Tovar என்ற நபரே கொள்ளையின் போது கெத்தாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

வெளியான சிசிடிவி காட்சியில், ஆயுதமேந்திய கொள்ளையர்கள் பாருக்குள் நுழைவதை கண்ட ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயத்தில் நடுங்கி கையை தூக்கிய படி சரணடைந்தனர்.

ஆனால், Tovar எந்த பயமும் இன்றி சாதாரணமாக அமர்ந்திருந்தார். அவர் அருகே வந்த கொள்ளையன், நெஞ்சில் துப்பாக்கியை வைத்து மிரட்டி போனை பிடுங்க முயற்சிக்கிறான். ஆனால், Tovar போனை தர மறுக்க கொள்ளையன் விட்டுச் செல்கிறான்.

பின்னர், உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க, எதிரே நாற்காலியில் அமர்ந்துக்கொண்டிருந்து Tovar, கெத்தாக சிகரெட்டை பற்ற வைத்து புகை பிடிக்கிறார். பின்னர், ஊழியரை தாக்கிய பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

ஆயுதமேந்திய கொள்ளையின் போது. Tovar கெத்தாக சிகரெட் பிடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள St. Louis பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து Tovar கூறியதாவது, கொள்ளையன் பற்றி நான் கவலையே படவில்லை. அவனுக்கு தேவை பணமும், போதையும் தான். அவன் யாரையும் காயப்படுத்த வரவில்லை எனக்கு தெரியும் என கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்