போனில் உயிரை காப்பாற்றும் படி கதறி அழுத குரல்.. அலட்சியமாக பதிலளித்த பெண்: பரிதாபமாக போன உயிர்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் அவசர உதவி மையத்தில் பணியாற்றும் பெண்ணின் அலட்சியத்தால் பெண் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Arkansas, Fort Smith நகரத்தை சேர்ந்த 47 வயதான Debra Stevens என்ற பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று பேப்பர் வழங்க போன Stevens, காருடன் வெள்ளத்தில் சிக்கியுள்ளார்.

காரிலிருந்து வெளியேற முடியாத Stevens, தன்னை மீட்க்க அவசர உதவி எண் 911 அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை Donna Reneau எடுத்துள்ளார். வேலையை ராஜினாமா செய்த Reneau, அவரது கடைசி வேலை நாளில் பணியாற்றிக்கொண்டிருந்துள்ளார்.

என்னால் காரிலிருந்து வெளியேற முடியவில்லை, நான் இறந்துவிடுவேனோ என பயமாக இருக்கிறது, உடனே மீட்புக்குழுவினரை அனுப்பும் படி Reneau-விடம் Stevens உதவி கேட்டு கெஞ்சியுள்ளார்.

(Image: Facebook)

இது உங்களுக்கு ஒரு படமாக இருக்கும், அடுத்த முறை நீங்கள் தண்ணீரில் வாகனம் ஓட்டிச் செல்லமாட்டீர்க்ள என அலட்சியமாக Reneau பதிலளித்துள்ளார். Stevens- இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டதால் அவர் கதறி அழுதுள்ளார்.

மேலும், வேறொரு அழைப்பையும் எடுத்து பேசிய Reneau, Stevens-ஐ கத்தாமல் வாயை முடி இருக்கும் படி அதட்டியுள்ளார். ஆனால், தண்ணீர் அளவு வேகமாக ஏறுவதாகவும், காரின் கதவு வரை ழூழ்கிவிட்டதாக Stevens கதறியுள்ளார்.

(Image: Facebook)

தொடர்ந்து 22 நிமிடங்கள் போனில் இருந்த Stevens திடீரென அமைதியாகியுள்ளார். ஒரு மணிநேரத்திற்கு பிறகு Stevens சிக்கி இருந்து இடத்தை கண்டறிந்த மீட்புக்குழுவினர், காரில் பிணமாக அவரை மீட்டுள்ளனர்.

அவசர உதவி மையத்தின் அதிகாரி Reneau-வுடன், Stevens-ன் இறுதி உரை பதிவாகியுள்ளது. இடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படவில்லை என்றால், Stevens-ஐ காப்பாற்றி இருக்கலாம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

(Image: Facebook)

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்