அமெரிக்கா படகில் உடல் கருகி இறந்த இந்திய ஜோடி: மீள முடியாத துயரத்தில் குடும்பத்தினர்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் குடியேறிய இந்திய தம்பதியினர் கலிபோர்னியாவில் நடந்த படகு விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் என்று நம்பப்படுகிறது.

செப்டம்பர் 2ம் திகதி santa Cruz தீவில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாக்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற குழந்தை மருத்துவரான Satish Deopujari-யின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

Satish Deopujari-லின் மகளும், பல் மருத்துவருமான Sanjeeri Deopujari, அமெரிக்காவில் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த Kaustubh Nirmal என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.

Sanjeeri Deopujari, Kaustubh Nirmal இருவரும் விபத்துக்குள்ளான படகில் பயணித்ததை குடும்பத்தினர் உறுதிசெய்துள்ளனர். தகவலறிந்த தந்தை Satish Deopujari உடனடியாக அமெரிக்காவிற்கு விரைந்துள்ளார்.

Facebook

சம்பவம் குறித்து Satish Deopujari சகோதரர் kishor கூறியதவாது, இத்தகவலை அறிந்த ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்று வருவதாக எங்களுக்கு சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. பல விஷயங்கள் இன்னும் தெளிவாக இல்லை என தெரிவித்துள்ளார்.

டிஎன்ஏ பரிசோதனை முடிந்து உடல்களை ஒப்படைக்க ஒரு வாரம் ஆகும் என அமெரிக்காவில் உள்ள Satish Deopujari-யின் இளைய மகள் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 பெண், 9 ஆண் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கப்பலின் மாலுமி உட்பட ஐந்து கப்பல் ஊழியர்கள் உயிர்தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கப்பலில் பயணித்த 34 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்