ஈரானை கவிழ்க்க மிகப்பெரிய சதி: அமெரிக்காவின் பல மில்லியன் டொலர்களை புறக்கணித்த இந்தியர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

சிரியாவுக்குச் செல்வதாக சந்தேகிக்கப்படும் ஈரானிய எண்ணெய் டேங்கரின் இந்திய கேப்டனுக்கு அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் பல மில்லியன் டொலர்கள் கொடுக்க முன்வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தடைகளை மீறி சிரியாவிற்கு கச்சா எண்ணெய் கடத்துவதாக வெளியான சந்தேகத்தால், கடந்த ஜூலை மாதம் 4ம் திகதியன்று பிரித்தானிய சிறப்பு கடற்படை ஈரான் கப்பலை ஜிப்ரால்டராலில் ஆறு வாரங்களுக்கு தடுத்து வைத்தது.

அந்த கப்பலை விடுவிக்க கூடாது என அமெரிக்க எடுத்த பல முயற்சிகளுக்கு பின்னரும் கூட, ஆகஸ்ட் 15ம் திகதியன்று பிரித்தானியா கப்பலை விடுவித்தது.

இதுகுறித்து பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிரியாவுக்குச் செல்வதாக சந்தேகிக்கப்படும் ஈரானிய எண்ணெய் டேங்கரின் இந்திய கேப்டனுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையின் 'இரான் நடவடிக்கைக் குழு'வின் தலைவர் பிரையன் ஹூக் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதில், அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்ய தோதான இடத்துக்கு கப்பலை ஓட்டி வந்தால் டிரம்ப் நிர்வாகம் பல மில்லியன் டொலர்களை தர தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மின்னஞ்சல் அனுப்பியது உண்மைதான் என பிரையன் ஹூக் ஒப்புக்கொண்டுள்ளார். சட்டவிரோத எண்ணெய் ஏற்றுமதியை தடுப்பதற்காக கப்பல்துறை சமூகத்துடன் அமெரிக்க வெளியுறவுத்துறை நெருக்கமாக வேலை செய்து வருகிறது.

சந்தேகத்திற்குரிய அட்ரியன் டர்யா-1 கப்பலின் கேப்டன் இந்தியாவை சேர்ந்த அகிலேஷ் குமார். அவருக்கு நாங்கள் அனுப்பிய மின்னஞ்சலை புறக்கணித்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து, அட்ரியன் டர்யா கப்பலை கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா, அகிலேஷ் குமாருக்கு எதிராகத் தனிப்பட்டமுறையிலும் தடை விதித்துள்ளது. மேலும், ஈரான் எண்ணெயை விற்பதற்கு உதவும் ஈரானிய கப்பல் வலையமைப்பு மீது அமெரிக்கா புதன்கிழமை தடை விதித்தது. அத்துடன் அந்த அமைப்பை சீர்குலைக்கும் எவருக்கும் 15 மில்லியன் டாலர் தரப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவாத் ஜாரிஃப் அமெரிக்கா வெளிப்படையாக லஞ்சம் தர முயன்றதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்