நெடு நேரமாக திறக்காத விமானத்தின் பாத்ரூம் கதவு: பின்னர் காத்திருந்தவர்கள் கண்ட அசௌகரிய காட்சி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பிரபல அமெரிக்க பீச் வாலிபால் நட்சத்திரமான Stafford Slick வழக்கமாக பயணம் மேற்கொள்ளும் விமானம் ஒன்றில் நடந்த சம்பவம் ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

விமானத்திலிருந்த கழிவறையின் அருகேதான் அவருக்கு இம்முறை இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அப்படி பயணம் செய்யும்போது, கழிவறையை பயன்படுத்துவதற்காக தொடர்ந்து பெண்கள் சிலர் வந்து காத்திருந்தும் கழிவறையின் கதவு திறக்காமலிருப்பதைக் கவனித்துள்ளார் அவர்.

நேரமாக ஆக, பெண்களின் வரிசை நீண்டுகொண்டே போகிறது.

ஒரு பெண் பயணி வெகு நேரமாக கழிவறைக்குமுன் காத்திருப்பதைக் கண்ட ஒரு விமான பணிப்பெண், நீங்கள் இன்னும் இங்கேதான் நிற்கிறீர்களா என்று கேட்க, அந்த பெண், உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள் என பதிலளிக்கிறார்.

சுமார் 10 நிமிடங்களுக்குப்பிறகு கழிவறையின் கதவு மெதுவாக திறக்கிறது. உள்ளேயிருந்து சிவப்பு நிற உடையணிந்த ஒரு ஆண் வெளியே வருகிறார்.

சரி இனியாவது கழிவறையைப் பயன்படுத்தலாம் என்று அந்த பெண்மணி நகரும்போது, கழிவறைக்குள்ளிருந்து ஒரு பெண்ணும் வெளியே வருகிறார்.

அவரும் அந்த ஆணைப்போலவே சிவப்பு நிற உடையணிந்திருக்கிறார். அந்த வீடியோவை வெளியிட்டு, நானும் பலமுறை விமானத்தில் பயணம் செய்திருக்கிறேன், இப்படி ஒரு காட்சியை பார்ப்பது இதுதான் முதல்முறை, என்று கிண்டலாக கமெண்ட் செய்திருக்கிறார் Slick.

இதில் வேடிக்கை என்னவென்றால், கழிவறைக்கு வெளியில் காத்திருந்த பெண்களில் ஒருவர் கூட, நடந்த சம்பவத்திற்கு எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை என்பதுதான்!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்