தலையை கடித்து இழுத்துச் சென்ற சிங்கம்... தனியாக சண்டையிட்டு போராடி உயிர்பெற்ற 8 வயது சிறுவன்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் தைரியமான 8 வயது சிறுவன் சிங்கத்துடன் தனியாக சண்டையிட்டு உயிர் பிழைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Colorado, Bailey பகுதியைச் சேர்ந்த Pike Carlson என்ற சிறுவனே இவ்வாறு உயிர்பிழைத்துள்ளார். கடந்த மாதம் மலை சிங்கத்துடன் போராடி தான் உயிர் பெற்ற திக் திக் நிமிடங்களை பகிர்ந்துள்ளார் Pike.

கடந்த மாதம் Pike வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அவரை தாக்கிய மலை சிங்கம் Pike-ன் தலையை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. எனினும், தைரியமான சிறுவன் சிங்கத்தை சரமாரியாக வெறும் கைகளால் குத்தி தாக்கியுள்ளார்.

இதுகுறித்து Pike கூறியதாவது, நான் தொடர்ந்து சிங்கத்தை சரமாரியாக குத்துக்கொண்டிருந்தேன், குச்சி ஏதாவது கிடைக்கிறதா என தேடினேன். ஒரு குச்சியைக் கண்டுபிடித்தேன், அதை கண்ணில் குத்த முயற்சித்தேன், ஆனால் விரைவில் குச்சி முறிந்தது.

Pike, சிங்கத்துடன் போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர், உடனே உதவிக்கு அவரது தந்தையை அழைத்துள்ளார். தந்தை Carlson கத்தியுடன் சம்பவயிடத்திற்கு சென்று, போராடி மலை சிங்கத்தை விரட்டி மகனை மீட்டுள்ளார்.

dailystar

Carlson கூறியதாவது, Pike-ன் முகம் முழுவதும் சிதைந்த ரத்தமாக இருந்தது. தாக்குதலுக்குப் பிறகு அவரது முகத்தில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவர் நலமாக இருக்கிறார் என கூறியுள்ளார்.

dailystar

இச்சம்பவத்தை அடுத்து குறித்து மலை சிங்கத்தையும் மற்றொரு இளம் ஆண் சிங்கத்தையும், வனவிலங்கு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers